21ஆம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிறைவு பெறுமா??

இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 21ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நிறைவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் நாட்டின் வழமையான செயற்பாடுகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை அறிக்கையாக முன்வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்திருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளார்.

எனவே, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக நாடு திறக்கப்படுகின்ற தீர்மானம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



நன்றி -Siva Ramasamy

21ஆம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிறைவு பெறுமா?? 21ஆம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிறைவு பெறுமா?? Reviewed by Editor on September 14, 2021 Rating: 5