திருகோணமலை மாவட்ட செயலகத்தின் கணக்காளராக இதுவரைகாலமும் கடமையாற்றிய பி.டபிள்யூ. பாக்யா எதிர்வரும் 16ஆம் திகதி தொடக்கம் கந்தளாய் தள வைத்தியசாலையின் கணக்காளராக இடம் மாற்றம் பெற்று செல்ல உள்ளார்.
இதனை முன்னிட்டு இன்று (14) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வொன்று மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில் நடைபெற்றது.
குறிப்பிட்ட சில உத்தியோகத்தர்களது பங்குபற்றலுடன் மாத்திரம் நடைபெற்ற இந்நிகழ்வில், அவரின் சேவையை பாராட்டி மாவட்ட அரசாங்க அதிபரினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கான நினைவு சின்னங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
2013ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இலங்கை கணக்காளர் சேவையன் மூன்றாம்தர உத்தியோகத்தராக இவர் மாவட்ட செயலகத்தில் இணைந்து கடமையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ,பிரதம கணக்காளர் எஸ். பரமேஸ்வரன் ,சக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
September 14, 2021
Rating:

