அதிகம் சம்பளம் பெறுவோரிடமிருந்து 5% வரி அறவிடப்படுமா? அமைச்சர் டலஸ்

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5% வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்ததார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் வெளியிட்ட கூற்று தொடர்பில் அங்கு கேள்வி எழுப்பப்பட்டது, பல்வேறு பிரதேசங்களில் நிலவும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு அடுத்த வாரத்தின் பின்னர் இல்லாமல் போகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.



(அரசாங்க தகவல் திணைக்களம்)

அதிகம் சம்பளம் பெறுவோரிடமிருந்து 5% வரி அறவிடப்படுமா? அமைச்சர் டலஸ் அதிகம் சம்பளம் பெறுவோரிடமிருந்து 5% வரி அறவிடப்படுமா? அமைச்சர் டலஸ் Reviewed by Editor on September 15, 2021 Rating: 5