மூன்று கிலோகிராம் சீனியை மாத்திரமே வாடிக்கையாளர்கள் சதொச ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 5 கிலோகிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3 கிலோகிராம் சீனியை மாத்திரமே ஒரு வாடிக்கையாளருக்கு விற்க அனுமதிக்கப்பட்டதாக சதொசவின் தலைவரான ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் 5 பேர் மாத்திரமே சதொச விற்பனை நிலையங்களில் அனுமதிக்கப்படுவதால் சீனியைக் கொள்வனவு செய்ய வரும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் போதுமான அளவு சீனி விநியோகிக் கப்பட்டுள்ளது என அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளரான செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதுமான அளவு சீனி இருப்பு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தொலைதூர பகுதிகளிலுள்ள சில கடைகளுக்கு சீனியை விநியோகிப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி - தினக்குரல்
Reviewed by Editor
on
September 15, 2021
Rating:
