பொதுமக்களிடம் கோரிக்கை விடும் நீர் வழங்கல் சபை

நீர் பாவனையாளர்கள் தங்களது மாதாந்த நீர்க்கட்டணங்களை ஒன்லைன் (Online) மூலம் செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் திலின எஸ் விஜயதுங்க  பொதுமக்களை கேட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவையாக நீர் வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் அவசர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமது சபையின் பணியாளர்கள் தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றி வருவதாக அந்த சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை 0112 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



பொதுமக்களிடம் கோரிக்கை விடும் நீர் வழங்கல் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடும் நீர் வழங்கல் சபை Reviewed by Editor on September 01, 2021 Rating: 5