நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள், ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்

(றுஷைத் பின் அர்ஷத் றஷீதி)

இஸ்லாமிய கண்ணோட்டதில் பதவியைப் பற்றிய கூறும் போது, வெறும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்துடன் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம் தலைவர்கள் அரசியல்வாதிகள் பலரை நாம் இன்று பார்த்து வருகிறோம். ஆனால் இஸ்லாம் கூறுவது, பதவி என்பது ஓர் அமானிதமாகும்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'

 "நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, (புகாரி:7148)

ஆட்சிக்கு ஆசைப்படுவது தலைவருக்கு ஆகாத செயலாகும்.

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)

தலைவருக்கு சிறந்தகுணம் வேண்டும்-

''(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.'' .(அல்குர்ஆன் 3:159)

தன்னுடைய சுயநல தீர்மானங்களை எடுக்காது கலந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் மனோநிலை இருத்தல் வேண்டும்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)

தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 42:37:38)

சேவைகளில் உளத்தூய்மை முக்கியமான பகுதியே உளத்தூய்மை ஆகும்.

“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்கள்: புகாரி: 01 , முஸ்லிம் : 3530

நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் இப்னு 

இன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் உயர் பதியில் இருப்பவர்கள் தன்னுடைய பலத்தை வைத்து ஆட்சி அமைப்பது இந்த உலத்தோடு முடிந்துவிடும்.

தகுதி உடையவர்களுக்கே அந்ததந்த பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

மறுமையில் ஆட்சி பற்றி கேள்வி கணக்கும் நிச்சயம் உண்டு.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அல்லாஹ் (விரும்பியதை)விற்காக விரும்புகிறாரோ, அல்லாஹ் (வெறுத்ததை)விற்காக வெறுக்கிறாரோ, அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ, அல்லாஹ்விற்காக தடுக்கிறாரோ (அவர் தன்) ஈமானை பரிபூரணப்படுத்திவிட்டார்.

அறிவிப்பவர்: அபுஉமாமா(ரலி) நூல்: அபூதாவூத் 



நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள், ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள் நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள், ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள் Reviewed by Editor on September 01, 2021 Rating: 5