ஆதார வைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கு பொது வைத்திய நிபுணரின் அனுசரனையில் புதிய சீருடை

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (23) வியாழக்கிழமை, ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஷாத் எம் ஹனீபா அவர்களினால், வைத்தியசாலை நலன்புரி சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணராக கடமையாற்றி, உயர் படிப்பு நிமிர்த்தம் இலண்டன் சென்ற டாக்டர் எம். அஹமட் பரீட் அவர்களின் அனுசரணையில் அக்கரைப்பற்று GMOA கிளையின் ஏற்பாட்டில் வைத்தியசாலைக்கு இது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






ஆதார வைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கு பொது வைத்திய நிபுணரின் அனுசரனையில் புதிய சீருடை ஆதார வைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கு பொது வைத்திய நிபுணரின் அனுசரனையில் புதிய சீருடை Reviewed by Editor on September 23, 2021 Rating: 5