விளையாட்டு கழகங்களை மக்கள் நலனோம்பும் பொதுப்பணியில் இணைக்கும் செயற்திட்டம் ஆரம்பம்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தினர் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று அனைத்து விளையாட்டு கழகங்களையும் மக்கள் நலனோம்பும் பொதுப்பணிகளில் இணைத்து பயணிக்கும் செயற்திட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கெளரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இன்று (23) வியாழக்கிழமை மாநகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எச்.சீ.எம்.லாபீர்,செயலாளர் அக்கரைப்பற்று அனைத்து விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள்  மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தினர் விளையாட்டு கழகங்களோடு இணைந்து எதிர்காலத்தில் செயற்படுத்தவிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக கலந்தாய்வு செய்யப்பட்டது.  

மேலும் அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தினை வினைத்திறன்மிக்கதாக  செயற்படுத்த பிரதேச அமைப்புகளையும், கழகங்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்டி சமுதாயப்பணிகளை முன்னெடுப்பதென ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கு கௌரவ மாநகர முதல்வர் தமது பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்தார்.











விளையாட்டு கழகங்களை மக்கள் நலனோம்பும் பொதுப்பணியில் இணைக்கும் செயற்திட்டம் ஆரம்பம் விளையாட்டு கழகங்களை மக்கள் நலனோம்பும் பொதுப்பணியில் இணைக்கும் செயற்திட்டம் ஆரம்பம் Reviewed by Editor on September 23, 2021 Rating: 5