(றிஸ்வான் சாலிஹு)
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட கொவிட் தடுப்பூசி இன்று (03) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக இசங்கணிச்சீமை வட்டாரத்தில் இடம் பெற்றதாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் ரீ.எம்.ஐயூப் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் வழிகாட்டலில், கெளரவ உறுப்பினர் ரீ.எம்.ஐயூப் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.
உள்ளுராட்சி மன்ற ஒவ்வொரு வட்டார உறுப்பினர்களும் அம்மக்களுக்கான பணிகளில் தங்களை அர்ப்பணித்தால் மிகவும் இலகுவாக இத்தடுப்பூசியை மக்களுக்கு வழங்க முடியும் என்பதோடு, இந்த ஏற்பாட்டை மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்து தந்து சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், சுகாதார பணியாளர்கள், இசங்கணிச்சீமை ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர், பொருளாளர் மற்றும் இந்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பிரதேச சபை உறுப்பினர் ஐயூப் நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
September 03, 2021
Rating:



