தேசிய மொழிகளுக்கு அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

இலங்கையின் பிரதான தேசிய மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் சட்டப்பூர்வமாக்கப்படுள்ளதை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரச நிறுவனங்கள், சட்டரீதியான நிறுவனங்கள், நெடுஞ்சாலை அறிவித்தல் பலகைகள், போக்குவரத்து சேவைகள் போன்ற அத்தியாவசிய பொது சேவைகள், பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உளூராட்சி நிறுவனங்களுக்கும் இது அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும்.

எனினும், உயர் நீதிமன்றத்தால் ஆங்கிலத்தில் மட்டுமே தீர்ப்புக்களை வெளியிடுவது பெரும்பாலும் சிக்கலுக்குரியது என்றும் ஆங்கில மொழி சரியாக தெரியாத பெரும்பாலான மக்களுக்கு அது அநீதியானது எனவும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச அணுகல், வெளிநாட்டுக் கல்வி மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்புக்கு ஆங்கிலம் இன்றியமையாதது மற்றும் முக்கியமானது என்றும், ஆனால் அது இலங்கையில் தேசிய மொழி ஒன்றல்ல என்றும்  ஆங்கிலம் ஒருங்கிணைக்கும் மொழி மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் உரிய தீர்ப்புகளை வெளியிடும் போது சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் வெளியிடுவது மிகவும் முக்கியம் என்றும் அவ்வாறு மேற்கொள்வது இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் சமூக ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தும் எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டார்.



தேசிய மொழிகளுக்கு அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசிய மொழிகளுக்கு அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார Reviewed by Editor on September 03, 2021 Rating: 5