கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள்

(அஸ்ரி அமீர்)

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் மீனவர்களின் வலைகளில் அகப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பாரிய சுறாக்கள் மற்றும் திருக்கை போன்ற மீன்கள் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்டு ரூபா 8 இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இன்றும் (5) 12 அடி நீளமான கொப்புறா மீன் ஒன்றும் அப்பகுதி மீனவர்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொப்பறா மீனின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபா எனவும் இதேவேளை குறித்த மீனவரின் வலையில் சுமார் 50 கிலோ கிராம் எடையுள்ள திருக்கை இன மீன் ஒன்றும் பிடிபட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதற்கும், பிடித்த மீன்களை சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள் Reviewed by Editor on September 05, 2021 Rating: 5