கிராம சேவகர் பிரிவு ரீதியான அபிவிருத்தி திட்டங்கள்

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக 2022ஆம் ஆண்டில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக 03 மில்லியன் பெறுமதியான  வாழ்வாதார செயற்பாட்டினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலான ஒன்றுகூடல் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விமலவீர திசாநாயக்க அவர்களுடன்,  அமைச்சர் அவர்களின் மாவட்ட மட்ட மற்றும் கிராமிய மட்ட இணைப்பாளர்கள், பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் பிரதேச  செயலக கணக்காளர், திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளரின் வரவேற்புரையை தொடர்ந்து கூட்டத்தின் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டதுடன் கௌரவ அமைச்சர் அவர்களினால் தற்போதைய அரசாங்கமானது உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, போன்ற பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும்,

மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் முகமாக  ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 03 மில்லியன் நிதியினை ஒதுக்கீடு செய்து சிறந்த வாழ்வாதார திட்ட முன்மொழிவினூடாக மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது. 

எனினும் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பாரிய வேலைத் திட்டத்தலும் வெற்றி கண்டுள்ள நமது அரசானது,  எந்த ஒரு அரசாங்கத்தாலும் செய்யமுடியாத பல்வேறு   அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றது எனவும் தெரிவித்தார். 

மேலும், யானை வேலி அமைப்பது தொடர்பான மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அனைத்து விதமான கோரிக்கைகளையும் எதிர்வரும் வருடங்களில் நிறைவேற்ற முடியுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





கிராம சேவகர் பிரிவு ரீதியான அபிவிருத்தி திட்டங்கள் கிராம சேவகர் பிரிவு ரீதியான அபிவிருத்தி திட்டங்கள் Reviewed by Editor on September 28, 2021 Rating: 5