(றியாஸ் இஸ்மாயில்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராமப் பிரிவுகளில் 2022ம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் அடையாளப்படுத்தும் கூட்டம் (24) வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபீர் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் நஜிஹா முஸாபீர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹுசைனுடின், அமைச்சரின் இணைப்பாளர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உலமாக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 32 கிராமப் பிரிவுகளிலும் 2022ம் ஆண்டு பயனாளிகளுக்கு கூடுதலாக வாழ்வாதாரங்கள் வழங்குவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
September 24, 2021
Rating:
