(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி இடம் மாற்றலாகிச் செல்லும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை வைபவம் இன்று (25) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் டாக்டர் ஏ.சீ.அப்துல் ரஷாக் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கர் டாக்டர் ஆசாத் எம் ஹனீபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், சிரேஷ்ட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும்நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இடமாற்றலாகி செல்லும் விசேட வைத்திய நிபுணர்களான பொது வைத்திய நிபுணர் டாக்டர் அமித் குலரத்ன அவர்களும், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் அர்ஷாத் அஹமட் அவர்களும் நிகழ்வின் பிரதம அதிதி மற்றும் விசேட அதிதிகளால் பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசில்கள் வழங்கியும் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
அத்தோடு, வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றும் மாற்றலாகியும் வருகை தந்த விசேட வைத்திய நிபுணர்கள் இந்நிகழ்வில் வரவேற்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
September 25, 2021
Rating:












