யானைகளின் அட்டகாசம், விவசாய நிலங்கள் பாதிப்பு

(றியாட் முஹிடீன்)

அக்கரைப்பற்று, சின்ன முல்லைத்தீவில் நேற்றிரவு (31) செவ்வாய்க்கிழமை, பொதுமக்களின் இருப்பிடம் மற்றும் விவசாயம் செய்யப்பட்ட இடங்கள் ஆகியவற்றில் யானைகளின் அட்டகாசத்தால் உரிய தரப்பினருக்கு பாதிப்பும், நஷ்டங்களும் ஏற்பட்டுள்ளது.

இது, இவ்ஊரின் எல்லையில் அபாய சங்கு ஊதப்படும் நிகழ்வாக பார்க்க வேண்டியுள்ளதோடு, இது தொடர்பில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுத்து இதன் பின்னர் இவ்வாறான அழிவுகளிலிருந்து இம்மக்களின் பொருளாதாரத்தை காப்பாற்ற முயற்சி எடுக்கும் படி அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றனர்.






யானைகளின் அட்டகாசம், விவசாய நிலங்கள் பாதிப்பு யானைகளின் அட்டகாசம், விவசாய நிலங்கள் பாதிப்பு Reviewed by Editor on September 01, 2021 Rating: 5