(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளராக கடந்த ஒரு தசாப்த காலமாக உன்னத கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் அஷ்ஷேக். ஏ.எல்.எம்.ஹாஷிம் அவர்களுக்கு அக்கரைப்பற்று "பைத்துல் ஹிக்மா" நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு (18) சனிக்கிழமை மாலை அக்கரைப்பற்று நீர்ப்பூங்கா மண்டபத்தில் இடம்பெற்றது.
பைத்துல் ஹிக்மா அமைப்பின் தலைவர் கலாநிதி. எம்.ஐ.எம்.ஹனீபா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.ஏ. ராசீக், தற்போதைய அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் அஷ்ஷெய்க். ஏ. எம்.ரஹ்மத்துல்லாஹ், கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள், பைத்துல் ஹிக்மா நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
சுகாதார வழிமுறைகளை பேணி இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு பெறுமானம் மிக்க கல்விச் சேவையாற்றி விடைபெறும் அஷ்ஷெய்க். ஏ.எல்.எம்.ஹாஷிம் அவர்களின் பணிகளை பாராட்டி கௌரவ முதல்வர் மற்றும் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
September 19, 2021
Rating:




