விவாதப் போட்டியின் கால் இறுதிக்கு தெரிவான அக்கரைப்பற்று பிரதேச சபை அணி - பிரதேச சபை உறுப்பினர் ஐயூப் தெரிவிப்பு

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம்  நடாத்தும் அகில இலங்கை ரீதியாக தமிழ் பேசும் 76 உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து நடாத்துகின்ற விவாதப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று பிரதேச சபை மாத்திரமே கால் இறுதிப் போட்டிக்கு தெளிவாகியுள்ளது‌ என்று அக்கரைப்பற்று பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் ரீ‌.எம்.ஐயூப் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு மன்றங்களுக்கும் வெவ்வேறு தலைப்புகளை வழங்கி உறுப்பினர்களின் அறிவுத்திறனை விருத்தி செய்வதற்கும், உறுப்பினர்களின் தேடல்களை கண்டறிவதற்கும், தனிமனித ஆளுமைகளை அடையாளம் காண்பதற்கும், கூட்டு முயற்சியாக செயற்படுவதை அவதானிக்க நடத்தப்படுகின்ற இப்போட்டியில் தான் அக்கரைப்பற்று பிரதேச சபை கால் இறுதிப் போட்டிக்கு தெளிவாகியுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ரீ எம் ஐய்யூப்,

அம்பாறை மாவட்டம் சார்பாக எமது அக்கரைப்பற்று பிரதேச சபை வெற்றியீட்டியுள்ளது "அல்ஹம்துலில்லாஹ்"  மீதமுள்ள போட்டிகளிலும் எங்களுடைய பிரதேச சபை வெற்றி பெறும் என்பதையும் இரு போட்டிகளிலும் எங்களுடன் பங்குபற்றிய வடமாகாண  இரண்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

இப்போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.ஏ.றாசிக், கௌரவ உறுப்பினர்களான ரீ.எம்.ஐய்யூப்,   ஏ.ஜி.பர்சாத், ஜனாப். நஜீப் ஆகியோர்களின் பங்குபற்றலுடன் மிகவும் ஆக்கபூர்வமான விவாத திறனை முன்வைத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி ஈட்டி கால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தொற்று காரணமாக அனைத்து போட்டிகளும் zoom தொழில்நுட்பம்  ஊடாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



விவாதப் போட்டியின் கால் இறுதிக்கு தெரிவான அக்கரைப்பற்று பிரதேச சபை அணி - பிரதேச சபை உறுப்பினர் ஐயூப் தெரிவிப்பு விவாதப் போட்டியின் கால் இறுதிக்கு தெரிவான அக்கரைப்பற்று பிரதேச சபை அணி -  பிரதேச சபை உறுப்பினர் ஐயூப் தெரிவிப்பு Reviewed by Editor on September 18, 2021 Rating: 5