அமெரிக்காவின் விமானங்களில் ஊஞ்சலாடும் தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை வீரர்கள் விட்டுச்சென்ற விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் இறக்கைகளில் தாலிபான்கள் ஊஞ்சலாடும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது படைகளை விலக்கிக் கொண்டது.

அவர்கள் செல்லும் போது ஏராளமான ஆயுதங்கள், பயன்பாடற்ற விமானங்கள், ஹெலிகாப்டர்களையும் விட்டுச் சென்றனர். இந்நிலையில் கைவிடப்பட்ட விமானத்தின் இறக்கையில் துளையிட்டு சில தாலிபான் தீவிரவாதிகள் ஊஞ்சலாடும் காணொளி தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







அமெரிக்காவின் விமானங்களில் ஊஞ்சலாடும் தாலிபான்கள் அமெரிக்காவின் விமானங்களில் ஊஞ்சலாடும் தாலிபான்கள் Reviewed by Editor on September 12, 2021 Rating: 5