கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி நாட்டை மீண்டும் திறக்க அதிகாரிகள் நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இறுதி தீர்மானம் செப்டெம்பர் 30 ஆம் திகதி எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையானது நாட்டை மீண்டும் திறக்க ஓரளவு சாதகமானது என அவர் தெரிவித்தார்.
நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொண்ட ஆய்வு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை முடித்த முதல் 10 நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கை, இப்போது தடுப்பூசி போடும் முறையை திறம்பட நடத்தும் சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
(தினக்குரல்)
Reviewed by Editor
on
September 25, 2021
Rating:
