(றிஸ்வான் சாலிஹு)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதைசங்களில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில், அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ குழுவினரின் ஆதரவில் மூன்றாவது நாளாகும் இன்று (01) அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் ஜும்ஆ பட்டின பள்ளிவாசல்களில் காலை 8.00 மணி முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அக்கரைப்பற்றில் இதுவரை இரண்டாவது தடுப்பூசி பெறாத பொதுமக்கள் இதன் தேவையை நன்கறிந்து தங்களுடைய தடுப்பூசியை பெற்று தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் இந்த கொவிட் தொற்றிலிருந்து காப்பாற்ற அதிகாலையிலேயே தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு வருகை தந்தமை பாராட்டக்கூடிய விடயமாகும்.
பல சிரமங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயற்திட்டமானது மிகவும் நேர்த்தியான முறையில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பணியாளர்கள், அனர்த்த முகாமைத்துவ குழுவினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Reviewed by Editor
on
September 01, 2021
Rating:
















