பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆலோசகராக பதவி வகிக்கவில்லை என்று பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கெக்கிராவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் கௌரவ பிரதமரின் ஆலோசகராக பதவி வகிப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
நந்தரதன தேரர் தற்போது கௌரவ பிரதமரின் ஆலோசகராகவோ அல்லது வேறு எந்தவொரு பதவியும் வகிக்கவில்லை என்றும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்று பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
September 16, 2021
Rating:

