புதிய சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்

(றிஸ்வான் சாலிஹூ, பட உதவி மாதவன்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிய பொதுச் சத்திர நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர் எம்.றிப்ஸான் ஜெமீல் அவர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம்.ஆசாத் முன்னிலையில் நேற்று (13) திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். 

அன்றைய தினம், புதிய வைத்திய நிபுணரினால் வைத்தியசாலையில் ஒரு மாங்கன்றும் ஞாபகார்த்தமாக நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், இடமாற்றம் பெற்றுச் செல்லும் பொதுச் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பீ.கே.ரவிந்திரன் உட்பட, வைத்தியர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







புதிய சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம் புதிய சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம் Reviewed by Editor on September 14, 2021 Rating: 5