ஆப்கானிஸ்தானின் புதிய அரசு, தாலிபான் அறிவிப்பு

(அஸ்ரி இப்னு அமீர்)

ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக முல்லா முகமது ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  துணை பிரதமராக முல்லா பராதர் செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இன்று வெளியிட்டார்.

பிரதமராக முல்லா முகமது ஹாசனும், சிராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அரசின் "உள்துறை அமைச்சர்” ஆக நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல், இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சராக மவுலவி அமிர்கான் முத்தாகி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லா அப்துல் ஹக் வாஸிக் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பிரதமராக முல்லா முகமது ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை பிரதமராக முல்லா பராதர் செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

மவ்லவி காரி பாசிஹுதீன்" ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அரசாங்கத்தின் "இராணுவத் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






ஆப்கானிஸ்தானின் புதிய அரசு, தாலிபான் அறிவிப்பு ஆப்கானிஸ்தானின் புதிய அரசு,  தாலிபான் அறிவிப்பு Reviewed by Editor on September 07, 2021 Rating: 5