ஆதார வைத்தியசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு

(கே.மாதவன்)

The Teaching of Islam (TOI) நிறுவனத்தினரால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவு விடுதிக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நேற்று (25) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இதனை அந்த அமைப்பின் சார்பில் டாக்டர் .றிபாஸ்தீன் அவர்களினால், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஆஸாத் எம் ஹனிபா அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

வைத்தியர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.



ஆதார வைத்தியசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு ஆதார வைத்தியசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு Reviewed by Editor on September 26, 2021 Rating: 5