பருவச் சீட்டு 26ஆம் திகதி முதல் வழங்கப்படும்

200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று (21) வியாழக்கிழமை மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி முதலே பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டு(Season ticket) வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

குறித்த பருவச் சீட்டுகளை எதிர்வரும் 26ஆம் திகதி முதல்29ஆம் திகதி வரையும் அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரையும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் பஸ் தரிப்பு நிலைய அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என இலங்கை போக்குவரத்து சபையின் உதவி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக ஸ்வர்ணஹங்ஷ தெரிவித்துள்ளார்.


நன்றி - தினக்குரல்



பருவச் சீட்டு 26ஆம் திகதி முதல் வழங்கப்படும் பருவச் சீட்டு 26ஆம் திகதி முதல் வழங்கப்படும் Reviewed by Admin Ceylon East on October 21, 2021 Rating: 5