அத்தியாவசிய பொருட்களுடன் அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்

விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா இன்று (21) கலந்துகொண்டிருந்தார்.

அவர், சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் தனது எதிர்ப்பினை வெளியிட்டார். மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத்தினை சபையில் கடுமையாக விமர்சித்தார்.

பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





அத்தியாவசிய பொருட்களுடன் அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர் அத்தியாவசிய பொருட்களுடன் அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர் Reviewed by Editor on October 21, 2021 Rating: 5