காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக மீண்டும் டாக்டர் நசிர்தீன்

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.எல்.நசிர்தீன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.இங்கு சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கடந்த எட்டு வருடங்களாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் நசிர்தீன் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியாக கடந்த ஒரு வருடம் நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த நிலையிலேயே, மீண்டும் அவர் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் நசிர்தீன்  நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக மீண்டும் டாக்டர் நசிர்தீன் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக மீண்டும் டாக்டர் நசிர்தீன் Reviewed by Admin Ceylon East on October 03, 2021 Rating: 5