(சமூர்டீன் நெளபர்)
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு (வரவுசெலவு) திட்டத்தின் ஊடாக கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக செயற்படுத்தப்பட இருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்க்ஷ அவர்களின் பணிப்பின் பேரில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மேற்பார்வையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் வன்னி மாவட்டத்திற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (03) வவுனியா ஆனந்தி ஹோட்டலில் நடைபெற்றது.
எதிர்வரும் ஆண்டிற்கான பாதீட்டு(வரவுசெலவு) திட்டத்தில் உள்வாங்கப்பட இருக்கின்ற கிராம சேவகர் பிரிவு ரீதியான அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் பற்றி ஆக்கப்பூர்வமான பல்வேறு கருத்துக்கள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இநாநிகழ்வில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனை சார் கால்நடை அபிவிருத்தி மற்றும் சிறு பொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ. டீ.வீரசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமரத்தின சுமதிபால, சதாசிவம் கனகரத்தினம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின,நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்க்ஷ அவர்களின் இணைப்பாளர் டப்ளியூ. ஜீவன்த ,பிரதேச மற்றும் நகரசபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், பிரதேசசபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள், கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Admin Ceylon East
on
October 04, 2021
Rating:


