ஆதனவரி அறவீடு தொடர்பான மென்பொருள் அக்கரைப்பற்று மாநகர சபையினால் அங்குரார்ப்பணம்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலகுவாகவும், துரிதமாகவும் ஆதன வரியினை (Assessment Tax) செலுத்திக்கொள்ளும் வகையிலான கணினி பயன்பாட்டு மென்பொருள் (Assessment Tax Application Software) அக்கரைப்பற்று மாநகர கெளரவ முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இன்று (27) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

புதிய தொழில்நுட்பம் மற்றும் உள்ளடக்கங்களுடன் கூடிய இம்மென்பொருள் Infotads (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாப்.  நதீர் ஷெரீப் (ஆதம்லெப்பை ஷெரீப்தீன்) அவர்களினால் வடிவமைக்கப்பட்டதுடன், அதன் பயன்பாடு தொடர்பாகவும் இந்நிகழ்வின் போது அவரால் அறிமுக செய்து வைக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. 

வினைத்திறன்மிக்க உள்ளூராட்சி மன்ற சேவைகளை இப்பிராந்திய மக்களுக்கு வழங்கும் நோக்கில் இம்மென்பொருளை வடிவமைத்து வழங்கிய அக்கரைப்பற்று மண்ணின் மைந்தரான  ஜனாப்.நதீர் ஷெரீப் (ஆதம்லெப்பை ஷெரீப்தீன்) அவர்களினை பிரதேச மக்கள் சார்பாக கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ.எம்.ஏ. ராசீக் மற்றும் மாநகர சபை உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.









ஆதனவரி அறவீடு தொடர்பான மென்பொருள் அக்கரைப்பற்று மாநகர சபையினால் அங்குரார்ப்பணம் ஆதனவரி அறவீடு தொடர்பான மென்பொருள் அக்கரைப்பற்று மாநகர சபையினால் அங்குரார்ப்பணம் Reviewed by Editor on October 27, 2021 Rating: 5