தர்மசக்தி அமைப்புடன், உலமா சபை சிநேகபூர்வ சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஓருங்கிணைப்பிற்குமான பிரிவின் ஏற்பாட்டில் கீழ் நாட்டில் பல தசாப்தங்கலாக சகவாழ்வு சமூக ஒற்றுமைக்காக குரல் கொடுத்து சேவை செய்து வரும் தர்மசக்தி அமைப்புடன் முக்கிய சந்திப்பொன்று கடந்த புதன்கிழமை (29) நடைபெற்றது.

தர்மசக்தி அமைப்பின் தலைவரும் அமரபுர மஹா சங்க சபாவையின் பொதுச் செயளாலருமான கௌரவ பல்லேகந்த ரத்ணசார தேரர், தர்மசக்தி அமைப்பின் பொதுச் செயளாலர் கலாநிதி கௌரவ மாதம்பகே அச்சஜி தேரர் உட்பட அமைப்பின் பதவி தாங்குனர்கள் இவ்வமைப்பின் சார்பில் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யாதுல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூரமித் அவ்வமைப்பை வரவேற்று ஜம்இய்யாவின் பணிகள் பற்றி முன்வைத்தார்கள். 

சந்திப்பின் போது மதத் தலைவர்கள் ஒன்றினைந்து புரிந்துணர்வுடன் தமது தனித்துவத்தை பேணி இனங்களுக்கிடையில் சகவாழ்வாழ்வை கட்டியெழுப்ப மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





தர்மசக்தி அமைப்புடன், உலமா சபை சிநேகபூர்வ சந்திப்பு தர்மசக்தி அமைப்புடன், உலமா சபை சிநேகபூர்வ சந்திப்பு Reviewed by Admin Ceylon East on October 04, 2021 Rating: 5