(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் வழிகாட்டலில், அனர்த்த முகாமைத்துவ சபையின் ஏற்பாட்டில் " கொவிட்-19 நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு இன்று(01) வெள்ளிக்கிழமை காலை வேளையில் அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தலைவர் அல்ஹாஜ்.எச்.சீ.எம்.லாபீர் தலைமையில் அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
கொவிட் அசாதாரண சூழ்நிலையால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாதிக்கப்பட்டு வறுமானம் அற்று மிகவும் வசதி குறைந்த சுமார் 1500 குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு வட்டார கெளரவ மாநகர, பிரதேச உறுப்பினர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இவ் உலர்வுணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
(கீழே உள்ள வீடியோவை அழுத்துங்கள்)
அக்கரைப்பற்று மாநகர சபை, APEC அமைப்பு, அக்கரைப்பற்று ஸகாத் நிதியம், வர்த்தக பிரமுகர்கள், தனவந்தர்கள் மற்றும் பிரதேச நலன்விரும்பிகள் ஆகியோர் கொவிட்-19 இடர் கால நிவாரணம் வழங்கும் இச்செயற்திட்டத்திற்கு கணிசமான நிதிப்பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள்.
அக்கரைப்பற்று மாநகர கெளரவ முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச கௌரவ தவிசாளர் எம்.ஏ.றாசீக், கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள்,கெளரவ பிரதேச சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர். ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்சார், அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அல்ஹாஜ்.எம்.டீ.ஹமீத், இராணுவ உயரதிகாரி, அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ சபை நிர்வாகிகள் உட்பட உறுப்பினர்கள், ஸகாத் நிதிய நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
