(றிஸ்வான் சாலிஹு)
சர்வதேச முதியோர் தினத்தினை சிறப்பிக்குமுகமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் 100 வயதினை அடைந்த சிரேஷ்ட பிரஜைகளினை கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைவாக பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம். கைஸ் அவர்களினால் இன்று (01) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவில் வசிக்கும் யூசுப் லெப்பை உதுமாலெப்பை (100 வயது) அவர்களும், அட்டாளைச்சேனை 01ஆம் பிரிவில் வசிக்கும் ஏ.எல். சுலைமாலெப்பை (104 வயது) அவர்களும் மற்றும் பாலமுனை 01 சேர்ந்த அவ்வா உம்மா (104 வயது) ஆகியோர்களுக்கு அவர்களுடைய வீட்டிற்குச் சென்று பொன்னாடை போர்த்தி பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமட் ஷாபிர், உதவிப்பிரதேச செயலாளர் திருமதி நஹிஜா மற்றும் இப்பிரிவுகளுக் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Admin Ceylon East
on
October 01, 2021
Rating:



