அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு அனர்த்தம் குறித்த எச்சரிக்கை

பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்டபட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக  அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எஸ். அகிலன் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் டெங்கு நுளம்பு அதிகமாக பரவக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் பொது மக்கள் அவதானமாக செயற்பட்டு குறித்த இடங்களை டெங்கு துளம்புகள் அற்ற இடங்களாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எஸ். அகிலன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒலுவில், அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்கள் அதிகமாக டெங்கு நோய் பரவக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் காணப்படுமாயின்  இரண்டு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் .அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது வதிவிடங்களை இடங்களை வைத்து கொள்ளுமாறு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எஸ். அகிலன் கேட்டுக்கொண்டுள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)



அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு அனர்த்தம் குறித்த எச்சரிக்கை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு அனர்த்தம் குறித்த எச்சரிக்கை Reviewed by Editor on October 18, 2021 Rating: 5