பெண் தலைமைத்துவ இடைவெளி நிரப்பப்பட வேண்டும் - அமைப்பாளர் றைஷா மஹ்ரூப்

(அலுவலக செய்தியாளர்)

திருகோணமலை மாவட்டத்தின் பெண் தலைமைத்துவ இடைவெளி நிரப்பப்பட வேண்டும். பெண்களின் சமூக அரசியல் அபிலாசைகள் பெண் தலைமைத்துவத்தைக் கொண்டு தீர்க்கப்பட வேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அமைப்பாளர் றைஷா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகள் கடந்த காலங்களில் கவனயீர்ப்பு செய்யப்படவில்லை என்பது வருந்தத் தக்க விடயமாகும்.

காலா காலாமாக ஆண் பாலுக்கு எதிரான பாலாக பெண் பால் என்று கற்றுக் கொடுத்து வந்த கலாசாரம் முற்றுப் பெற்று ஆண்பாலுக்கு இணையாக அல்லது எதிரில்லாத ஓரினமாக பெண்கள் பார்க்கப்பட வேண்டும். நாங்கள் ஆண் இனத்திற்கு எதிரானவர்களல்ல. ஆண்களின் ஒத்துழைப்போடுதான் பல தடைக் கற்களைத் தாண்டி பயணிக்க வேண்டும்.

பெண்களின் அரசியல் உரிமையையும் அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்காக திருகோணமலையில் மூவினத்தையும் சேர்ந்த வலுவான மகளிர் அணியை உருவாக்குவதற்காக முயன்று வருகிறேன். அதனடிப்படையில் உங்கள் மேலான ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.



பெண் தலைமைத்துவ இடைவெளி நிரப்பப்பட வேண்டும் - அமைப்பாளர் றைஷா மஹ்ரூப் பெண் தலைமைத்துவ இடைவெளி நிரப்பப்பட வேண்டும் - அமைப்பாளர் றைஷா மஹ்ரூப் Reviewed by Editor on October 18, 2021 Rating: 5