நீதிபதி ஸ்ரீநிதி அவர்களுக்கான பாராட்டு விழா

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள் தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு, அவரைப் பாராட்டி கௌரவிக்கும் பெரு விழா சனிக்கிழமை (30) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம்.ரமீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களும் கலந்து கொண்டு விசேட நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்து வாழ்த்துரை நிகழ்த்தினார்.








நீதிபதி ஸ்ரீநிதி அவர்களுக்கான பாராட்டு விழா நீதிபதி ஸ்ரீநிதி அவர்களுக்கான பாராட்டு விழா Reviewed by Editor on October 30, 2021 Rating: 5