தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் பணிகள் ஆரம்பம்

கொவிட்- 19 காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் பணிகள் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், எந்தவொரு கைத்தொலைபேசியிலிருந்தும் 225 அல்லது 1225 ஐ அழைப்பதன் மூலம் அதன் சேவைகளைப் பெற திகதி மற்றும் நேரம் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்பதோடு, மேலும் www.ntmi.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் முன் பதிவு செய்வதற்குரிய திகதி, நேரத்தை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் பணிகள் ஆரம்பம் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் பணிகள் ஆரம்பம் Reviewed by Admin Ceylon East on October 02, 2021 Rating: 5