ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவுக்கு பைசால் காசிம் எம்.பி களவிஜயம்

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் அவர்களின் முயற்சியினால் மாவடிப்பள்ளி பிரதேச மக்களுக்காக கொண்டுவரப்பட்ட ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவின் நிர்மாண பணிகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் இன்று (02) சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது வைத்தியர், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இப்பிரதேச மக்கள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடன் இவ் வைத்திய பராமரிப்பு பிரிவு தொடர்பாக மேலும் சில கோரிக்கைகள் முன் வைத்தபோது அதனை உடன் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தார்.





ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவுக்கு பைசால் காசிம் எம்.பி களவிஜயம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவுக்கு பைசால் காசிம் எம்.பி களவிஜயம் Reviewed by Admin Ceylon East on October 02, 2021 Rating: 5