பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (21) வியாழக்கிழமை முற்பகல் வேளையில் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக்க கொடஹேவா, கஞ்சன விஜேசேகர, அருந்திக்க பெர்ணான்டொ மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான இசுரு தொடங்கொட ஆகியோர் வரவேற்றதோடு, அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன், ஜனாதிபதி அவர்கள் அவைக்குள் பிரவேசித்தார். 

ஜனாதிபதி அவர்கள் அவைக்குப் பிரவேசிக்கும் போது, நிலையியற் கட்டளை 27/2இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களினால் கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. 

எதிர்க்கட்சித் தலைவரின் வாய்மூல கேள்விகளுக்கு, அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் அளித்த பதில்களை, ஜனாதிபதி அவர்கள் செவிமடுத்துக்கொண்டிருந்தார். 





பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி Reviewed by Editor on October 21, 2021 Rating: 5