அக்கரைப்பற்றில் முதல் தடவையாக செய்யப்பட்ட வாய், தாடை, முகம் சத்திரசிகிச்சை

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக வாய், தாடை, முகம் சத்திரசிகிச்சை ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட வாய், தாடை, முகம் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் விராஜ் ஜெயசிங்க அவர்களின் தலைமையில் மயக்க மருந்து விசேட நிபுணர் டாக்டர் எம்.என்.எம்.எம்.சஹீர் மற்றும் சத்திரசிகிச்சை கூட வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களின் உதவியுடன் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த வைத்திய நிபுணர்களுக்கு நன்றி கூறுவதுடன் மேற்படி வைத்திய நிபுணர்களின் சேவையைப் பெற்று நன்மையடையுமாறு பிரதேச மக்களை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம்.ஆஷாத் இப்பகுதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம்.ஆஷாத் அவர்களின் வருகையின் பின்னர் பல தரப்பட்ட முன்னேற்றகரமான வைத்திய சேவைகள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




அக்கரைப்பற்றில் முதல் தடவையாக செய்யப்பட்ட வாய், தாடை, முகம் சத்திரசிகிச்சை அக்கரைப்பற்றில் முதல் தடவையாக செய்யப்பட்ட வாய், தாடை, முகம் சத்திரசிகிச்சை Reviewed by Admin Ceylon East on October 05, 2021 Rating: 5