அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மூன்று கோடி ரூபா செலவில் அபிவிருத்திப்பணிகள்

(அமீர் அஸ்ரி)

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான டப்ளியூ. டீ. வீரசிங்கவின் அட்டாளைச்சேனைப் பிரதேச இணைப்பாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஜெசீல் வேண்டுகோளுக்கிணங்க அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக சுகாதார அமைச்சரின் செயலாளர் சிறி ரஜீபன் பிரதம அதீதியாக கலந்து கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிந்து விரைவில் இதற்கான வேலை திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகான சுகாதர பணிப்பாளர் டாக்டர் தௌபீக், கல்முனை பிராந்திய சுகாதார பணிமணை வைத்தியர் ஜீ.சுகுனன், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் டாக்டர் முனாஸ்டீன், டாக்டர் கே.எல். நக்பர், டாக்டர்.றிபாஸ் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.







அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மூன்று கோடி ரூபா செலவில் அபிவிருத்திப்பணிகள் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மூன்று கோடி ரூபா செலவில் அபிவிருத்திப்பணிகள் Reviewed by Admin Ceylon East on October 24, 2021 Rating: 5