பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் நேற்று (04) முடங்கியதன் எதிரொலியாக பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 7 மணி நேரத்தில் 4.89% வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இதன் மூலம் 6.11 பில்லியன் டோலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், கடந்த 1 மாதத்தில் மட்டும் மொத்த மதிப்பில் 15% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதனால் பேஸ்புக் நிறுவனர் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்கின் சொத்து மதிப்பு கடந்த 1 மாதத்தில் குறைந்துள்ளது. இதனால் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜுக்கர்பெர்க் 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் நேற்றைய (04) தினம் திடீரென முடங்கியமை குறிப்பிடத்தக்கது.
(News.lk)
Reviewed by Editor
on
October 05, 2021
Rating:
