குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

குவைத்தில் உள்ள மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எஞ்சிய எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் ஆலையில் (ARDS) இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இச்சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயினை அணைக்க முயற்சிகள் எடுத்து வருவதோடு, இதன் காரணமாக இதுவரையில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட பயங்கரமான சத்தத்தை சிலர் நிலநடுக்கம் என்று தவறாக பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து Reviewed by Editor on October 18, 2021 Rating: 5