சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியது சீனா

சீனாவில் கொவிட் – 19 பரவல் அதிகரித்துவரும் நிலையில் 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சினோபார்ம், சினோவெக் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. சீனாவில் இதுவரை 223 கோடி  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 105 கோடி பேர் இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, அடுத்தாண்டு சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் சூழலில் அங்கு மீண்டும் கொவிட் – 19 பரவல் அதிகரித்துள்ளன. இதனால், பல்வேறு இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குழந்தைகளுக்கும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹூபெய், புஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. 




சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியது சீனா சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியது சீனா Reviewed by Editor on October 26, 2021 Rating: 5