அருணோதயம் நகரம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு

(சமூர்டீன் நெளபர்)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் தொலைநோக்கு கொண்ட வழிகாட்டலின் கீழ் பிரதமர் மாண்புமிகு மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் ஆசிர்வாதத்துடன் இலங்கை இந்தியா நட்புறவை மேலோங்கச் செய்யும் வகையில் இந்தியா நிதியுதவி வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வவுனியா மாவட்டத்தின் வென்கல செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மெனிக்போம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் அடங்கிய "அருணோதயம்" நகரானது திங்கட்கிழமை (04) உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ. இந்திக அனுருந்த, இலங்கைக்கான இந்திய  துணைத்தூதுவர் மதிப்பிற்குரிய  R. நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குலசிங்கம் திலீபன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி  அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் குறித்த வீட்டுத்திட்டமானது பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








அருணோதயம் நகரம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு அருணோதயம் நகரம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு Reviewed by Admin Ceylon East on October 05, 2021 Rating: 5