Iconic Youths அமைப்பின் புதிய சீருடை அறிமுகமும் வருடாந்த ஒன்றுகூடலும்


(றிஸ்வான் சாலிஹு)

Iconic Youths -Srilanka அமைப்பின் புதிய சீருடை அறிமுகமும் வருடாந்த  ஒன்றுகூடல் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (15) மாலை 6.30மணிக்கு, அமைப்பின் தலைவர் யூ.எம்.தில்ஷான் தலைமையில், அக்கரைப்பற்று AIMS சர்வதேச பாடசாலை கேட்போர் கூடத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி. டபிள்யு.ஏ.ஜீ.ஷகரிகா தமயந்தி அவர்களும், கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், விசேட அதிதிகளாக மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.முபாறக் அலி, அக்கரைப்பற்று இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எம்.ஸமிலுல் இலாஹி அவர்களும், அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர்கள், பொதுச் செயலாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய தலைவர் தில்ஷான் தனது உரையில்,

இந்த சமூக சேவை அமைப்பானது கடந்த ஆறு வருடங்களாக இன மத பேதமின்றியும், பிரதேச வாதம் இன்றியும், கஸ்டப்படுகின்ற மக்களை தேடிச்சென்று அவர்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்கான தனவந்தர்கள் மூலம் ஏற்பாடு செய்தும், அடிப்படை தேவையின்றி வாழ்பவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளையும் செய்து வருவதோடு, கல்வி கற்க முடியாமல் இருக்கும் மாணவர்களை அரவனைத்து எப்படியேனும் கல்வியை கற்க வைப்பதற்கான நிதியுதவி மற்றும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றோம்.

அத்தோடு, இளைஞர்கள் போதைவஸ்து போன்ற கெட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்கின்ற ஒரேயொரு விடயத்திற்காகவும் இளைஞர்களை இந்த அமைப்பில் ஒன்றினைத்து அவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கி சமூகத்தில் நல்லவர்களாக வாழ வழியமைத்து கொடுக்கின்றோம் என்று தெரிவித்ததோடு, அமைப்பினால் கடந்த ஆறு வருடத்தில் செய்யப்பட்ட செயற்திட்டங்களையும் விளங்கப்படுத்தினார்.

பிரதம அதிதியான உதவிப் பணிப்பாளர் திருமதி ஷகரிகா தமயந்தி உரையாற்றுகையில், 


கெளரவ அதிதியாக கலந்து கொண்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தமீம் உரையாற்றுகையில்,

இந்நிகழ்வில் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதம அதிதி, கெளரவ அதிதி, விசேட அதிதி, தலைவர் மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்களினால் புதிய சீருடை வழங்கி வைக்கப்பட்டதுடன், ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்களும், பிரதேச இணைப்பாளர்களுக்குமான கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு, அமைப்பின் தலைவரினால் பிரதம அதிதிக்கு ஞாபக சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


























Iconic Youths அமைப்பின் புதிய சீருடை அறிமுகமும் வருடாந்த ஒன்றுகூடலும் Iconic Youths அமைப்பின் புதிய சீருடை அறிமுகமும் வருடாந்த ஒன்றுகூடலும் Reviewed by Editor on October 17, 2021 Rating: 5