ஜப்பான் தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்ட "Kawashima" எனும் இயந்திரம் கையளிப்பு

காத்தான்குடி நகர சபையின் Zero Solid waste எனும் எண்ணக்கருவுக்கமைய உக்கக்கூடிய கழிவுகளை கொண்டு சேதனப் பசளை தயாரிக்கும் வேலை திட்டத்தின் ஒரு அங்கமாக ஜப்பான் தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்ட "Kawashima" எனும் இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதனை Kawashima நிறுவனம் நகரசபைக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் (JP) நகர சபையின் செயலாளர் திருமதி றிப்கா றபீக், கணக்காளர் உட்பட அனைவரும் கலந்துகொண்டதுடன் Kawashima நிறுவனத்தின் பொறியியலாளர்களினால் நகரசபை ஊழியர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அதற்கான சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
விரைவில் இந்த Kawashima திட்டம் இயங்கவிருப்பதோடு உக்கக்கூடிய கழிவுகளுக்கான நிரந்தரத் தீர்வாகவும் இது அமையவிருக்கிறது என்று நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார்.










ஜப்பான் தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்ட "Kawashima" எனும் இயந்திரம் கையளிப்பு ஜப்பான் தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்ட "Kawashima" எனும் இயந்திரம் கையளிப்பு Reviewed by Editor on October 03, 2021 Rating: 5