RKS விளையாட்டுக்கழக சீருடை அறிமுக நிகழ்வு

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று Royal King விளையாட்டு கழக (RKS) கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22) வெள்ளிக்கிழமை, கழகத்தின் அலுவலகத்தில், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் எம்.எம்.றுக்சான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம் அவர்களும், அக்கரைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி சமீலுல் இலாஹி, விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.இம்று பஸ்கான், அக்கரைப்பற்று-16 கிராம சேவை உத்தியோகத்தர் திரு.லிதர்சன், கழகத்தின் ஆலோசகர் கலாபூசனம் ஜனாப். நூர்தீன் (ஜே.பி), Iconic Youths அமைப்பின் தலைவரும், இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதித் தலைவர் யூ.எல்.தில்ஷான், Iconic Youths அமைப்பின் ஆலோசகரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.றிஸ்வான் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் கழக உறுப்பினர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதம அதிதி தனது உரையின் போது, இளைஞர்கள் சமூகத்திற்கு எந்தளவு முக்கியம் வாய்ந்தவர்கள் என்பதை எடுத்துரைத்ததோடு சமூகத்தில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் எனவும் இவ்வாறான கழகங்கள் மூலம் சமூகத்தில் இருக்கும் இளைஞர்கள் எதிர்கால தலைவர்களாக வருவதற்கு சகல பயிற்சிகளும் விளையாட்டு கழகங்கள் மூலம் பெறப்பட வேண்டும் என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.








RKS விளையாட்டுக்கழக சீருடை அறிமுக நிகழ்வு RKS விளையாட்டுக்கழக சீருடை அறிமுக நிகழ்வு Reviewed by Editor on October 23, 2021 Rating: 5