Y2K Minhajian Palamunai அமைப்பின் அங்குராப்பண நிகழ்வு

 (அஸ்ரி இப்னு அமீர்)


Y2K Minhajian Palamunai (2000 - Batch) அமைப்பின் முதலாவது அங்குராப்பண நிகழ்வில் அமைப்பின் சீருடை அறிமுகமும், நண்பர்கள் சந்திப்பும் அதன் தலைவர் ஏ.ஜே.பாயிஸ் அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. அகமட் சாபீர் அவர்களும், விசேட அதிதிகளாக பாடசாலையின் முன்னாள் அதிபரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளருமாகிய எஸ்.எம்.எம் ஹனிபா JP  அவர்களும் பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) அதிபர் கே.எல்.உபைதுல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டு அமைப்பின் சீருடையை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்வில் இந்அமைப்பினர்களால்  தாய் பாடசாலையான மின்ஹாஜ் ம.வி தேசிய பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனம் (Sound System) அதன் அதிபர் உபைதுல்லாஹ்  அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் வறியவர்களுக்கு நீர் இணைப்பினை பெற்றுக்கொடுக்கும் பொது வேலைத்திட்டத்திற்கமைய ஒரு பயனாளி தெரிவுசெய்யப்பட்டு நீர் இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டும் கையளிக்கப்பட்டது.

அதிதிகளாக கலந்துகொண்டவர்களுக்கு அமைப்பினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.









Y2K Minhajian Palamunai அமைப்பின் அங்குராப்பண நிகழ்வு Y2K Minhajian Palamunai அமைப்பின் அங்குராப்பண நிகழ்வு Reviewed by Editor on October 26, 2021 Rating: 5