13 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும், 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டது

(நூருல் ஹுதா உமர்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பல் தேவை செயலணியினர் இணைந்து காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 918 வீடுகளில் டெங்கு கள பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 13 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும், 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் வழங்கப்பட்டது.

எனவே நுளம்பு பெருகுவதனை குறைக்கவும், சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் டெங்கு பரவுவதைத் தடுக்கவும் தினமும் 20 நிமிடங்கள் சுற்றுச்சூழலைப் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை அகற்றி விடுமாறு அல்லது அழித்து விடுமாறும் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக டெங்கு ஒழிப்பு பிரிவினருக்கு உதவ தயாராக இருக்குமாறும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.





13 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும், 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டது 13 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும், 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டது Reviewed by Editor on November 10, 2021 Rating: 5