60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பம்

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் 60 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கான மூன்றாவது பைசர் தடுப்பூசி போடும் நடவடிக்கை இன்று (30) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167பி, 167டி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுககளிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பைசர் தடுப்பூசி போடப்பட்டது.

புதிய காத்தான்குடி நூறானிய்யா ஜும்ஆப்பள்ளிவாயலில் இத் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம்பெற்றது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் மேற்பார்வையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்கு பற்றுதலுடன் தாதியர்களினால் இத் தடுப்பூசி போடப்பட்டது.

இத் தடுப்பூசி போடும் நடவடிக்கையில்; இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சுகாதார ஊழியர்கள், காத்தான்குடி நகர சபை ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கி பங்குபற்றினர்.

ஏற்கனவே இரண்டு தடவைகள் செனோபாம் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பம் Reviewed by Editor on November 30, 2021 Rating: 5